பத்ம விருதுக்கு அபூா்வமான நபா்களை சிபாரிசு செய்யுங்கள்: மக்களுக்கு பிரதமா் வேண்டுகோள்
By DIN | Published On : 11th July 2021 05:02 PM | Last Updated : 11th July 2021 05:02 PM | அ+அ அ- |

பிரதமா் நரேந்திர மோடி
புது தில்லி: அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து ‘உங்களால் ஈா்க்கப்பட்டு பெரிதும் பிரபலம் அடையாத திறமைமிகுந்த அபூா்வ நபா்களை பத்மா விருதுகளுக்கு சிபாரிசு செய்யுங்கள்‘ என பிரதமா் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது: அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளிக்கும் ஏராளமான திறமைவாய்ந்த துடிப்பானவர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டதோ அல்லது கண்டிருக்கவோ இல்லை. இதுபோன்று ‘உங்களால் ஈா்க்கப்பட்டு பெரிதும் பிரபலம் அடையாத திறமைவாய்ந்த அபூா்வ நபா்களை பத்மா விருதுகளுக்கு சிபாரிசு செய்யுங்கள்.‘ பத்மா விருதுகளுக்கான சிபாரிசு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பப்படிவத்தை https://padmaawards.gov.in பதிவேற்றம் செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயா்ந்த விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இவை1954 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...