உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்தது

கரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,065,340-ஆக உயர்ந்துள்ளது.  
உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்தது
உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்தது

கரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.85 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,065,340-ஆக உயர்ந்துள்ளது.  

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய நிலையில், பெரும்பாலான நாடுகள் தற்போது தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. தொற்று பாதிப்பைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 18,85,80,962 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,65,340 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 17,24,07,437 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,21,08,185 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 78,809 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,09,44,949-ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 4,11,439 -ஆக உள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,48,07,813 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 623,435-ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 29,304,451 பேர் மீண்டுள்ளனர்.

இதேபோல், பிரேசில், இந்தியா,பிரான்ஸ், ரஷ்யா, துருக்‍கி, இங்கிலாந்து, அர்ஜென்டினா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி  உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com