மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 73.02 அடியிலிருந்து 72.71 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,479 கனஅடியிலிருந்து 2,017 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 35.07 டி.எம்.சியாக இருந்தது.