புலம் பெயர்ந்த செங்கல் சூளைத்தொழிலாளர்களுக்கு  நிவாரண உதவி கோட்டாட்சியர் வழங்கல்

திருவள்ளூர் பகுதியில் கரோனாவால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி புதன்கிழமை நேரில் சென்று
புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை வழங்கிய கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி. 
புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை வழங்கிய கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி. 


திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் கரோனாவால் வேலையின்றி தவிக்கும் புலம் பெயர்ந்த செங்கல்சூளைத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக அரிசி மற்றும் மளிகை பொருள்களை கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி புதன்கிழமை நேரில் சென்று வழங்கினார்.

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமான செங்கல் சேம்பர்கள் செயல்பட்டு வருகிறது. அதனால் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஓடிசா, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இங்குள்ள செங்கல்சூளைகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபெயர்ந்து செங்கல் உற்பத்தி பணி செய்வதற்கு திருவள்ளுர் மாவட்டத்திற்கு வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட வருவாய்த்துறை, அசிம் பிரேம்ஜி பவுண்டேசன் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன உதவியுடன் புலம் பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கிளாம்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல்சூளைக்கு கோட்டாட்சியர் பிரித்தி பார்கவி தலைமை வகித்து கரோனா நிவாரணமாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள் ஆகியவைகளை புதன்கிழமை   வழங்கினார். இதேபோல், செங்கல் சேம்பர்களில் வேலை செய்து வரும் கர்ப்பிணிகள், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 2400 பேருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் டில்லிபாபு, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கிளாம்பாக்கம் ஊராட்சி தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் ரவி, ஐ.ஆர்.சி.டி.எஸ் கள ஒருங்கிணைப்பாளர்கள் மரிய ஆனந்தராஜ், பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com