முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
‘மக்கள் நீதி மய்யத்துடன் பேசினோமா?’ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம்
By DIN | Published On : 04th March 2021 09:42 PM | Last Updated : 04th March 2021 09:45 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கூட்டணி தொடர்பாக திமுக தவிர்த்த வேறு எந்தக் கட்சியுடனும் பேசவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவிடமிருந்து அழைப்பு வரவில்லை” என்றார்.
தொடர்ந்து அவர், “மக்கள் நீதி மய்யத்துடன் பேசியதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. தொகுதி பங்கீடு தொடர்பாக வெளியாகும் வதந்திகள் மற்றும் யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. மேலும் மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை கிடையாது” என அவர் தெரிவித்தார்.