இணையதளத்தில் டிரெண்டாகும் 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' ஹேஷ்டேக்

"மு.க.ஸ்டாலின் எனும் நான்" என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
இணையதளத்தில் டிரெண்டாகும் 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' ஹேஷ்டேக்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில் "மு.க.ஸ்டாலின் எனும் நான்" என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. 

இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 153 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இந்நிலையில், பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 153க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வரும் நிலையில்  "#மு.க.ஸ்டாலின் எனும் நான்" என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com