கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 10,736 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் விஜய் வசந்த்.
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் விஜய் வசந்த்.


நாகர்கோவில் : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 10,736 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றன. ஆளும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்து இருந்து வருகின்றனர். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னிலை இருந்து வருகிறார். 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பட்டதால் சட்டப்பேரவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

திமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த்  போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இத்தொகுதி வழங்கப்பட்டது. பாஜக சார்பில் கடந்த முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து இருவருமே தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. 

அதன்படி முதல் சுற்றில் (கிள்ளியூர் தொகுதியில் மட்டும்) விஜய் வசந்த்( காங்கிரஸ்) 4533 வாக்குகளும், பொன். ராதாகிருஷ்ணன்( பாஜ) 1164 வாக்குகளும், அனிட்டர் ஆல்வின்(நாம் தமிழர்) 652 வாக்குகளும், டாக்டர் சுபா. சார்லஸ் (மநீம) 104 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 10,736 வாக்குகள் பெற்று மற்ற வேட்பாளர்களை விட 3369 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விஜய் வசந்த் (காங்கிரஸ்) 24,218
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) 13,482

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com