முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம்: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
By DIN | Published On : 07th May 2021 07:04 PM | Last Updated : 07th May 2021 07:04 PM | அ+அ அ- |

மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம்: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
மகளிருக்கு சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபின் அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000, ஆவின் பால் விலைக் குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
இதில் ஒன்றாக அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.மேலும் இது நாளை(மே 8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.