மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார்
By DIN | Published On : 30th May 2021 10:59 AM | Last Updated : 30th May 2021 10:59 AM | அ+அ அ- |

மைதிலி சிவராமன்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன்(81) கரோனாவால் சென்னையில் காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்தவர் மைதிலி சிவராமன். இந்திய பெண்ணுரிமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர்.