முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்
By DIN | Published On : 26th November 2021 06:51 PM | Last Updated : 26th November 2021 06:52 PM | அ+அ அ- |

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கம்ஹாசன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | .15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை: மத்திய அரசு
இந்த நிலையில், கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.