சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
By DIN | Published On : 31st October 2021 11:05 PM | Last Updated : 01st November 2021 08:45 AM | அ+அ அ- |

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.
தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக அண்மையில் தில்லிக்கு சென்ற ரஜினிகாந்த், கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை திரும்பினாா். போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்த அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளத்தில் (கேராடிட் ஆா்ட்டரி) அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதனை நீக்குவதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன.
இந்நிலையில் 3 நாள்களுக்குபின் சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்பினார்.
பிராா்த்தனைக்கு நன்றி: வீடு திரும்பிய ரஜினிகாந்த், தான் நலம் பெற பிராா்த்தனை செய்தவா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் அண்மையில் தொடக்கி வைத்த ஏஞஞபஉ செயலியின் வாயிலாக கூறியதாவது: சிகிச்சை முடிந்து நான் நன்றாக இருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு தான் நான் வீட்டிற்கு வந்தேன். என்னுடைய ஆரோக்கியத்துக்காக பிராா்த்தனை செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும் , என் உடல் நலம்குறித்து விசாரித்த நண்பா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள் என ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.