பணியாளர்கள் முகக் கவசம் அணியவில்லையா வெளியேற்றுங்க: பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை

பணியிடங்களில் முகக்கவசம் அணியாத பணியாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
Mask compulsory
Mask compulsory
Published on
Updated on
1 min read


பணியிடங்களில் முகக்கவசம் அணியாத பணியாளர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

பணியிடங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: “ஊழியர்கள் பணியிடங்களுக்கு உள்ளே நுழையும் போதே அவர்களுக்கு தொற்று அறிகுறி உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும் கடந்த ஒரு வார காலத்தில் அந்த ஊழியரின் வீட்டில் யாருக்காவது தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கேட்டறிய வேண்டும்.

ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். பணியிடங்களில் வாய் மற்றும் மூக்கு உள்ளிட்டவை முழுவதுமாக மூடிய படி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான மேற்பார்வையாளர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்க வேண்டும்.

பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும். பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உதவி செய்திட வேண்டும்.

பணியிடங்களின் வாயில், முகப்பு மற்றும் தேவையான அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். தற்காலிக கை கழுவும் இடங்களை பணியிடங்களில் அமைத்திடவும் வேண்டும்.

பணியிடங்களில் உள்ள கேன்டீன்களில் 50 சதவிகித நபர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பணியிடங்களில் உள்ள கேன்டீன்களில் உணவு பரிமாறும் ஊழியர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயம்.

பணியாளர்கள் ஒரே நேரத்தில் பணியிடங்களில் கூடும் நிகழ்வுகளை நிர்வாகம் தவிர்த்திட வேண்டும். நிறுவனங்களில் உள்ள பணியாளர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் போக்குவரத்து பணியாளர்கள் தினசரி தொற்று அறிகுறி உள்ளதா என்பதற்கான பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும்.

நிறுவனங்களில் இருந்து வீட்டிற்கு செல்லும் வாகனங்கள் கூட்டம் இல்லாத படியும் ஜன்னல்கள் திறந்தபடி இருக்க வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com