உ.பி தேர்தல்: ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் பங்கேற்க வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு

மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் "ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்" ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
உ.பி தேர்தல்: ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் பங்கேற்க வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு

புது தில்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் "ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்" ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 

முதல் கட்டத் தோ்தல், மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூா், கௌதம்புத்தா நகா், முசாஃபா்நகா், மீரட், காஜியாபாத், புலந்த்சாஹா், அலிகா், மதுரா, ஆக்ரா, பாக்பத் ஆகிய 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் 
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இன்று உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் இந்த புனித திருவிழாவில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளைப் பின்பற்றி வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதலில் வாக்களியுங்கள், பிறகு சிற்றுண்டி அருந்துங்கள்!" என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சட்டசபை தேர்தலின் முதல் கட்ட தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், இந்த வேட்பாளர்களின் தலைவிதியை சுமார் 2.27 கோடி வாக்காளர்களின் கையில் உள்ளது. 

முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் கடந்த 2017 இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 53 தொகுதிகளிலும், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி தலா 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய லோக் தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 412 கம்பெனி மத்திய துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 50,000 துணை ராணுவப் படையினர் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 58 பேரவைத் தொகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் வகையில் மாநில எல்லைகளை போலீசார் சீல் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com