தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சிறுமி வன்புணர்வு கொலை வழக்கில் அஸ்ஸாமை சேர்ந்த நபருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை

கோல்பாரா(அசாம் மாநிலம்): அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் 2018ல் சிறுமியை வன்புணர்வு மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக தற்போது வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2022, 10:32 am

கோல்பாரா(அசாம் மாநிலம்): அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் 2018ல் சிறுமியை வன்புணர்வு மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக தற்போது வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நான்கு வருடம் முன்பு அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் ரோங்ஜூலி ரயில்வே நிலையத்திற்கு கீழ்வரும் சிமோலிடோல தேநீர் தோட்டத்தில் ஸ்ரீனுஸ் ராங் என்கிற கலு முண்டா 6 வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று கோல்பாரா போக்ஸோவின் சிறப்பு நீதிபதி எஸ் தார் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கினார்.

குற்றவாளியின் வழக்கறிஞர் சஞ்சய் சர்மா,"ராங் அந்த சிறுமியை வலுக்கட்டயமாக தோட்டத்தில் வைத்து தவறிழைத்தார்.மூன்று நாட்களுக்கு பிறகு அந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த ராங்கை 2018 டிசம்பர் 3ல் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.