ஹிமாசல் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சத்தீஸ்கர் முதல்வர்

ஹிமாசல பிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்தார். 
ஹிமாசல் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சத்தீஸ்கர் முதல்வர்

ஹிமாசல பிரதேச பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நம்பிக்கை தெரிவித்தார். 

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மாநிலத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகள், அதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

தேர்தல் அறிக்கையில் மக்களின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக கூறியிருப்பதால் சாமானியர்களுக்கு அதன் மீது நம்பிக்கை உள்ளது. இன்று பாஜக என்ன செய்து கொண்டிருக்கிறது. சாமானியர்களிடமிருந்தும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்தும் பணத்தைப் பெற்று, பெரிய தொழிலதிபர்களுக்கு அவர்கள் கொடுக்கிறார்கள் என்றார். 

முன்னதாக ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காங்கிரஸின் வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 18 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை, என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தல் நவம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தல் முடிவுகள் டிச.8-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ் பிரதான போட்டியாளா்களாக உள்ள நிலையில், புது வரவாக ஆம் ஆத்மியும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com