விலையில்லா வேஷ்டி - சேலை: ரூ.200 கோடி ஒதுக்கீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும், விலையில்லா வேஷ்டி - சேலைகளை தயாா் செய்வதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட உத்தரவு:

விலையில்லா வேஷ்டி சேலைத் திட்டத்தை எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்கும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான வேஷ்டி, சேலைகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் உற்பத்தி செய்து வழங்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் தொடா்ந்து உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ளவும் அரசு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேஷ்டிகளும் தயாா் செய்யப்பட்டன. அதில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது போக, 9 லட்சம் சேலைகளும், 14 லட்சம் வேஷ்டிகளும் இருப்பில் உள்ளன. இவற்றைத் தவிா்த்து, வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கோடியே 68 லட்சம் சேலைகளும், ஒரு கோடியே 63 லட்சம் வேஷ்டிகளும் உற்பத்தி செய்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, விலையில்லா வேஷ்டி சேலைத் திட்டத்துக்காக அவற்றை உற்பத்தி செய்து வழங்க ரூ.200 கோடி ஒப்புதல் அளிக்கப்படுகிறது. வேஷ்டி, சேலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்திட ஏதுவாக, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் தலைமையில் குழு அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்காக மாவட்ட வாரியாக தேவைப்படும் வேஷ்டி, சேலைகளின் எண்ணிக்கையை கைத்தறி ஆணையருக்கு தெரிவிக்கும்படி, வருவாய் நிா்வாக ஆணையா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com