பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர்  வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சித்தரை மாதம் பிரமோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாட வீதியை வலம் வரும் பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர்.
சித்தரை மாதம் பிரமோற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாட வீதியை வலம் வரும் பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர்.

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நீண்ட ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர்  வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. 

சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் 9-ஆம் நாளான சித்ரா பௌர்ணமியன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால், திருத்தேர் பழுதடைந்த காரணத்தால் கடந்த சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திருத்தேர் உற்சவம் நடைபெறவில்லை. 

இந்த நிலையில், திருத்தேர் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, திருத்தேர் வெள்ளோட்டம் டிச.14-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. 

வெள்ளிக்கிழமை மாட வீதியை வலம் வரும் பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேர்.

பிரம்மோற்சவம் கொடியேற்றம்...
கடந்த மாதம் 27-ஆம் தேதி சித்திரை மாத பிரமோற்சவ கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார். புதன்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்சியான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். 

கோயில் பட்டாட்சாரியார் கஸ்தூரி ரங்கன் உள்ளிட்டோர் வேத பாராயணங்கள் முழக்கி தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனர். 

திருத்தேர் மாடவீதி வலம் வந்தது. வழி நெடுக்கிலும் மலர்கள் தூவி திருத்தேரை வரவழைத்தனர். 

பண்ருட்டி நகர் மன்றத் தலைவர் க.ராஜேந்திரன், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து எழுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com