நாட்டிலேயே உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு
By DIN | Published On : 14th April 2023 05:13 PM | Last Updated : 14th April 2023 05:13 PM | அ+அ அ- |

நாட்டின் மிக உயரமான 125 அடி அம்பேத்கர் சிலையை ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 133 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் மிக உயரமான 125 அடி அம்பேத்கர் சிலையை ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திறந்து வைத்தார்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஹூசைன்சாகர் ஏரிக்கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் நாடாளுமன்ற கட்டடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11.4 ஏக்கரில் ரூ.146.5 கோடியில் 360 டன் ஸ்டென்யின்லஸ் ஸ்டீல், 114 டன் வெண்கலத்துடன் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை வடிவமைத்தவர் 98 வயதான ராம் வஞ்சி என்ற சிற்பி ஆவார். இவர்தான் குஜராத்தில் வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயர ஒற்றுமை சிலையையும் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...