மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான (சியுஇடி)-யுஜி தேர்வு மையம் தொடர்பான தகவல்களை மே 5 அல்லது அதற்கு முன்னதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்க வாய்ப்பு
மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

புது தில்லி: பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான (சியுஇடி)-யுஜி தேர்வு மையம் தொடர்பான தகவல்களை மே 5 அல்லது அதற்கு முன்னதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வான (சியுஇடி)-யுஜி தேர்வு மையம் தொடர்பான தகவல்களை மே 5 அல்லது அதற்கு முன்னதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி)தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மாணவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டுகளை தேசிய தேர்வு முகமை(என்டிஏ)இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான பதிவுக்கான கடைசி தேதியை 2024 ஏப்ரல் 5 வரை நீட்டித்தது.

பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட பொது அறிவிப்பின்படி, கியூட்-யுஜி-2024 இன் விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான (சியுஇடி-யுஜி)2024 மே 15 முதல் மே 31 வரை நடைபெறுகிறது. இது சியுஇடி-யுஜி இன் மூன்றாவது நுழைவுத் தேர்வாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com