நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய இலங்கை மீனவரை மீட்ட நாகை மீனவர்கள்!

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவரை பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வந்த நாகை மீனவர்கள்
நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவரை  பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வரும் நாகை மீனவர்கள்
நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவரை பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வரும் நாகை மீனவர்கள்
Published on
Updated on
1 min read

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவரை பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வந்த நாகை மீனவர்கள், அவரை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி இரவு 11 மணிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவர் அகமது இர்ஃபான்
நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவர் அகமது இர்ஃபான்
நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கிய நிலையில் இருந்த இலங்கை மீனவரை  பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வரும் நாகை மீனவர்கள்
வயநாடு நிலச்சரிவு: 27 மாணவர்கள் பலி, 23 மாணவர்கள் காணவில்லை

இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி மதியம் 12 மணியளவில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையை சேர்ந்த ஒரு பைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கி நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை படகுடன் பத்திரமாக மீட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கிருந்து அவரை சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மீனவர் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த இப்ரால் லெப்பை மகன் அகமது இர்ஃபான் (41) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அகஸ்டின் என்பவரும் கடந்த 20 நாள்களுக்கு முன்பு திரிகோணமலையிலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது அகமது இர்ஃபானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com