
முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு மாதங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மீண்டும் இன்று(ஜூலை 6) அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
எல்.கே. அத்வானி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினார். பின்னர் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்வானி 2002-2004 வரை நாட்டின் துணை பிரதமராகவும், 1999-2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.