
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடந்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் கியூபாவின் குஸ்மானை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்று வினேஷ் போகத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு நுழைந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
வினேஷ் போகத் வெற்றி பெற்றதை அவரது குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். 29 வயதான அவர் இந்தியாவுக்காக காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.