திட்டக் குழு அறிக்கைதான் எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்: முதல்வர்

மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் இன்று (ஆக. 6) நடைபெற்றது.
திட்டக் குழு அறிக்கைதான் எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்: முதல்வர்
Published on
Updated on
2 min read

திட்டக் குழு அறிக்கைதான் எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட் என்று மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (6.8.2024) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர், மாநில திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

அதில் நான்காவது திட்டக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகளின்படியும், வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்பட்ட பணிகளான, புதுமைப் பெண் திட்டத்தின் தாக்கம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசு தொடக்க பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம், எண்ணும் எழுத்தும் திட்டச் செயலாக்கத்தின் மதிப்பீடு போன்ற ஆய்வு முடிவுகள் குறித்தும் விவரித்தார்.

மேலும் மாநில திட்டக் குழுவால் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களான தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம், வளமிகு வட்டாரங்கள் திட்டம், தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய பணிகள் பற்றியும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் பற்றியும் விரிவாக விவரித்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட ஆவணப் படத்தினை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புரையில் மக்களின் கல்வி, மருத்துவம், சுகாதாரம், சத்துணவு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்குடன் மாநிலத் திட்டக் குழு துரிதமாக செயல்பட்டு அரசுக்கு ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை வகுக்கவும், பரிந்துரைக்கவும் அறிவுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:

மூன்றாவது ஆண்டைத் தொடர்ந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திமுக அரசு, மாநில திட்டக் குழுவும் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயனுள்ள திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கை மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த அறிக்கையைதான், எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்டாக நான் நினைக்கிறேன்.

நமது அரசின் ஒவ்வொரு திட்டமும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை உயர்ந்துள்ளது என்பதை அறிந்தேன். இதனைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.

திட்டக் குழு அறிக்கைதான் எங்களுக்கு தரப்படும் மார்க் ஷீட்: முதல்வர்
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு!

மகளிர் உரிமைத் தொகை மூலமாக பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் அதிகமாகி இருக்கிறது.

பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம் மூலமாகப் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தின் காரணமாக கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தி வருகிறது.

அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, மிக மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அந்த அறிக்கையை முன் மாதிரியாக கொண்டு உங்களது ஆய்வறிக்கை ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நிதி வளம் இருக்குமானால், இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்கும் ஆலோசனைகளைச் சொல்லுங்கள். அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்து மனிதர்களையும் உடனடியாகச் சென்று சேரத் திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்துப் பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்கான இலகுவான நிர்வாகச் சீர்திருத்தங்களைச் சொல்லுங்கள்.

இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்கும் நான், இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பணியை, பொறுப்பை வழங்க விரும்புகிறேன். நமது ஆட்சியின் நோக்கங்களை, சாதனைகளைச் சொல்லும் வகையில் ஒரு மாபெரும் கருத்தரங்கை சென்னையில் நீங்கள் நடத்திட வேண்டும். அதில் பல்துறை அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களைப் பங்கேற்க வைத்து, அவர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று, அதனை வெளியிடுமாறு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்களைக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com