
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடித் திருக்கல்யாணம் வைபவம் வெள்ளிக்கிழமை (ஆக.9) காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சினேகவல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டு தோரும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் கேடகம், பல்லக்கு, காமதேனும், குதிரை, யானை, வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருகல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் தீபாரதணை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏரளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பூ, மஞ்சள், குங்குமம் ,மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டன. மதியம் அன்னதானம் நடைபெறுகிறது.
பாதுகாப்பு பணியில் திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் ஆய்வாளர் ஜெயபாண்டியன் முன்னிலையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சரக பொறுப்பாளர் பாண்டியன், தேவஸ்தான திவானும், நிர்வாகச் செயலருமான பழனிவேல் பாண்டியன் மற்றும் கிராம நாட்டார்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.