
அவிநாசி: அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியர் சனிக்கிழமை பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48). பனியன் தொழிலாளி.இவரது மனைவி லதா (42). இவர்கள்
இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவிநாசி மங்கலம் சாலை அருகே புறவழிச் சாலையில் வரும் போது, அதே திசையில் கோவை நோக்கி பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.