
நடப்பாண்டில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் 2024-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், ஐஐடி சென்னை முதலிடமும், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு இரண்டாமிடத்தையும், ஐஐடி மும்பை மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது.
சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் ஐஐடி சென்னை தொடர்ந்து 9 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.