பிரஜின் நடிக்கும் புதிய தொடர்!

நடிகர் பிரஜின் பத்பநாபன் வீரா தொடரில் இணைந்துள்ளார்.
நடிகர் பிரஜின்.
நடிகர் பிரஜின்.
Published on
Updated on
1 min read

சின்னதம்பி தொடர் நடிகரின் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்து பிரபலமானவர் பிரஜின் பத்மநாபன். இவர் இந்த தொடரில் நடித்து புகழ்பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இவர் டிஸ்யூம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே, பிரஜின் நடித்த சின்னதம்பி தொடர் ரசிகர்களிடையே மிகந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், சிறந்த நடிகருக்கான விருது பிரஜினுக்கும், சிறந்த ஜோடிக்கான விருது பிரஜின் - பாவனிக்கும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த அன்புடன் குஷி, வைதேவி காத்திருந்தாள் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இவர் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் உடன் படிக்காத பக்கங்கள் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா தொடரில் நடிகர் பிரஜின் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இத்தொடரில் தொடரில் பிரஜின் இணைந்துள்ள நிலையில், தொடரின் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வீரா தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் வைஷ்ணவி, அருண் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com