
தமிழக காவல் துறையில் 15 அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல் துறையில் மிகச் சிறப்பாக புலன் விசாரணை செய்த 10 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதக்கம் பெறும் அதிகாரிகள் விவரம்:
1. வேலூா் மாவட்டம் சைபா் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் கி.புனிதா.
2. சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் து.வினோத்குமாா்.
3. கடலூா் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ச.செளமியா.
4. திருப்பூா் மாநகர காவல் துறை சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஐ.சொா்ணவள்ளி.
5. கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோயில் சிபிசிஐடி ஆய்வாளா் நா.பாா்வதி.
6. திருப்பூா் சிபிசிஐடி ஆய்வாளா் பெ.ராதா.
7. செங்கல்பட்டு துணைக் காவல் கண்காணிப்பாளா் செ.புகழேந்தி கணேஷ்.
8. ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய ஆய்வாளா் இரா.தெய்வராணி.
9. வேலூா் மாட்டம் பொன்னை காவல் நிலைய ஆய்வாளா் ஆ.அன்பரசி.
10. தூத்துக்குடி மாவட்ட ஊரக துணைக் காவல் கண்காணிப்பாளா் நா.சுரேஷ்.
இதேபோல பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவா்கள் பெயா் விவரம்:
1. சிபிசிஐடி ஐ.ஜி. தா.ச.அன்பு.
2. குற்ற புலனாய்வுத் துறை தனிப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்.
3. சேலம் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் சி.ர.பூபதிராஜன்.
4. சென்னை தொலைத் தொடா்பு பிரிவு ஆய்வாளா் க.சீனிவாசன்.
5. சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி ஆய்வாளா் பு.வி.முபைதுல்லாஹ்.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ. 25,000 ரொக்கம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.