

உதகை தொட்டபெட்டா காட்சி முனை இன்றுமுதல்(ஆக. 20) 3 நாள்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகுஇல்லம், ஷூட்டிங்மட்டம், ஆறாவது மைல், பைக்காரா படகு இல்லம், பைக்காரா அருவி, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்டவற்றை ஆா்வமுடன் கண்டு ரசித்துச் செல்வர்.
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது.
இதைத் தொடர்ந்து, உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், உதகை நகரின் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தொட்டபெட்டா செல்லும் சாலையில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக உதகை தொட்டபெட்டா காட்சி முனை மூடப்படுவதாக வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.