இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை முந்திய ஷ்ரத்தா கபூர்!

இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் - பிரதமர் நரேந்திர மோடி
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் - பிரதமர் நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 9.14 கோடி பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையுடன் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகம் பின்தொடரும் இந்தியர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்களை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9.14 கோடியாக உள்ளது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9.13 கோடியாக உள்ளது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “ஸ்ட்ரீ 2” திரைப்படம் மூலம் ஷ்ரத்தா கபூர் அதிகம் பேசப்பட்டார். திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.300 கோடி வரை வசூலை நெருங்கியதாக பேசப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 27.1 கோடி, பிரியங்கா சோப்ரா 9.18 கோடி பின்தொடர்பவர்களுடன் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

ஆலியா பட் 8.51 கோடி, தீபிகா படுகோன் 7.98 கோடி பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் ஷ்ரத்தா கபூர் இணைந்துள்ளார்.

ஆனால் எக்ஸ் வலைதளத்தில் உலகத் தலைவர்களில் 10.1 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துபை அரசர் ஷேக் முகமது மற்றும் போப் பிரான்சிஸ் போன்ற உலகத் தலைவர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளார். பிரதமரின் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில் 5.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இந்திய அரசியல் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 2.67 கோடி பின்தொடர்பவர்களையும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2.76 கோடி பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com