காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார்.
காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார்.

ஆவின் பால் பண்ணையில் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதால் பெண் பலி

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார்.
Published on

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் பால் உற்பத்தில் செய்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வந்தது. உற்பத்தியாகி வரும் பாலை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் பெண் தொழிலாளி உமாராணி(30) ஈடுபட்டிருந்தார்.

காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார்.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

அப்போது, கன்வேயர் பெல்டில் உமாராணி அணிந்திருந்த துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி உமாராணி பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் கந்தன், தாலுகா காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், காவலர்கள் உமாராணி உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உமாராணி(30) சேலத்தை சேர்ந்தவர் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரியவந்தது.

காக்களூர் புறவழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கணவருடன் தங்கியிருந்த உமாராணி, கடந்த ஆறு மாதமாக ஆவின் பால் பண்ணைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தை தொடர்ந்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com