உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தேர்வானவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்

உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு பெற்ற 158 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 5 பேர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 5 பேர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு பெற்ற 158 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகள் வாயிலாக தேர்வாணையத்தின் வாயிலாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் போன்ற தொழில்நுட்ப பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற தொழில்நுட்பம் சாரா பணியிடங்கள் என மொத்தம் 1554 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற 223 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 5 பேர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
மனிதநேயம்தான் இந்தியர்களின் அடையாளம்: பிரதமர் மோடி பேச்சு

அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு மூலம் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு 158 தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் 5 பேர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

உதவி தோட்டக்கலை அலுவலர்கள், அனைத்து வருவாய் கிராமங்களின் அடிப்படை நிலை களப்பணியாளராக இருந்து, தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களில் தோட்டக்கலை அலுவலர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநருக்கு உதவுதல், மண் மற்றும் நீர் மாதிரிகளை சேகரித்தல், தோட்டக்கலை திட்டங்களுக்கான இடு பொருட்களை விநியோகித்தல், பயிர் அறுவடை சோதனைகளை மேற்கொள்ளுதல், இயற்கை பேரிடரின் போது சேத மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தருதல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com