வருங்கால தலைமுறை வெற்றிக்கான கொடி: விஜய் பேச்சு

ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் இதை நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வரும்கால தலைமுறை வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
Published on
Updated on
1 min read

சென்னை: ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் இதை நான் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் வரும்கால தலைமுறை வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய், சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் கட்சிக்கான கொடியையும் பாடலையும் சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு உறுதிமொழி எடுத்த பின்னர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு, கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
கட்சிக் கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார் விஜய்!

பின்னர் அவர் பேசியதாவது:

கொடியை அறிமுகப்படுத்தியது பெருமையாக உள்ளது. இன்றைய நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள் என்றும், அடுத்த நிகழ்ச்சி மாநில அளவிலான கட்சியின் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டில் கொடியில் இடம்பெற்றுள்ள படங்களின் விளக்கத்தையும், செயல் திட்டம், கொடிக்கான விளக்கம், கட்சியின் கொள்கைகள் ஆகியவை தெரிவிக்கப்படும். நம் கட்சிக் கொடிக்கு பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதை பின்னர் தெரிவிக்கிறேன்.

இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி சட்டரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்.

மேலும் நான் சொல்லாமலேயே உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் கட்சிக் கொடியை ஏற்றுவீர்கள் என்று தெரியும்.

உரிய அனுமதி பெற்று, உரிய வழிமுறைகளை பின்பற்றி அனைவரிடமும் தோழமைப் பாராட்டி கட்சிக்கொடியை ஏற்றுங்கள் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுறுத்திய விஜய், இந்த கொடியை ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை, தமிழகத்தின் வரும்கால தலைமுறையினருக்கான கொடியாக பார்க்கிறேன் என விஜய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com