
நேபாளத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததாக நேபாள போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா கூறுகையில், “ ‘UP FT 7623’ என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது பேருந்தில் இருந்தார்களா என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இந்த விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.