
தகுதி பெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயங்கும் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயனிக்கின்றனர்.
இந்நிலையில், தகுதி பெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரத்தில், டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ. 90 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவின் செயல்பாட்டு இயக்குநருக்கு ரூ. 6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ. 3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 10 ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவனம் சமர்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பயிற்சி பெறாத விமானி, விமானத்தை இயக்கிய நிலையில், விமானப் போக்குவரத்து இயக்கநரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறமால் இருக்க சம்பந்தப்பட்ட விமானியை எச்சரிக்கையுடன் இருக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்கநரகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.