கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: 29ல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை

கோப்புப்படம்

Published On :

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப். 8-ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ் பவனி செப். 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

விழாவிற்கு நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா் என்பதால், ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மூன்று முறை நடத்தப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை நாகை மாவட்ட நிா்வாகம், வேளாங்கண்ணி பேராலய நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட காவல் துறையினரும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து கூடுதலாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே சாா்பில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பக்தா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பேராலய நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழாவையொட்டி ஆக.29 இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக செப்.29 வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.