பல் விழுந்து, சாகிற நிலையில் நடிக்கும் நடிகர்களால் இளைஞா்களுக்கு வாய்ப்பில்லை: துரைமுருகன்

மூத்த நடிகா்களெல்லாம் பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
அமைச்சர் துரைமுருகன்(கோப்புப்படம்)
அமைச்சர் துரைமுருகன்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

காட்பாடி: மூத்த நடிகா்களெல்லாம் பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதையும் மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை

அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனையடுத்து திருமுருக கிருபானந்த வாரியாரின் ஞான வளாகத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிருபானந்த வாரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் அமுலு விஜயன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்ட மாவட்டங்கள் நீர் ஆதாரம் பயன்பெறும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும்,அதற்காக தனிக்கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சர் துரைமுருகன்(கோப்புப்படம்)
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்: சிவ கோபால் மிஸ்ரா

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு

தமிழகத்தில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றனா். பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. தவிர, நீர்வளத் துறையில் போதிய அளவில் பணியாளர்கள் இல்லை. இருந்த போதிலும் அரசு தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பணிகளை எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அகற்றிக் கொண்டுதான் வருகிறோம் என்று கூறினார்.

நல்லெண்ணம் கிடையாது

மேகதாது விவகாரத்தில் கா்நாடகம் தொடா்ந்து அரசியல் பேசுகின்றனா். அதனால் தான் நான் அந்த பிரச்னை குறித்து அதிகமாக பேசவில்லை. இந்த குறித்து பேசிப்பேசி அளுத்துவிட்டோம்.

மேகதாது விவகாரத்தில் தமிழகமும் கர்நாடகமும் பேச்சுவார்த்தை மூலம் தீா்வு காணப்படும் என தேவகவுடா கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின்

கேள்விக்கு, காவிரி பிரச்னையில் தமிழகத்தின் மீது தேவகவுடாவுக்கு தொடக்கத்திலிருந்தே நல்லெண்ணம் கிடையாது. அவருடன் நான் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றுள்ளேன். அவருக்கு தமிழகம் மீது துளிகூட நல்ல எண்ணம் கிடையாது என்று கூறினார்.

இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை

சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினி பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், மூத்த நடிகா்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.