பாஜகவில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று துரைமுருகனைக் குறிப்பிட்டு தமிழிசை செளந்தரராஜன் பேசியுள்ளார்.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினை பார்த்து நடிகர் ரஜினி பேசி இருந்த நிலையில், மூத்த நடிகா்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இருவரும் நகைச்சுவை பேச்சுதான், எங்களுடைய நட்பு தொடரும் என்று தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதில் அளித்துப் பேசியதாவது:
நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன் குறித்துப் பேசி திமுவில் ஒரு புயலை உருவாக்கியிருக்கிறார். சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார். கட்சியில் மூத்தவரான துரைமுருகன் ஸ்டாலினுக்கு கீழ்படிந்து இருக்க சொல்வார்கள், அடுத்து உதயநிதிக்கு கீழ்படிய சொல்வார்கள்.
கட்சியில் உழைத்த திமுகத் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை கிடைக்கும் என்று தமிழிசை பேசினார்.
பாஜகவில் சேரும்படி துரைமுருகனைக் குறிப்பிட்டு தமிழிசை செளந்திரராஜன் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.