மணிப்பூர் பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படுவதில்லை: திமுக எம்.பி. திருச்சி சிவா

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை, பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படுவதில்லை
கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
Updated on
1 min read

கோவை: மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை, பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படுவதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, திருச்சியில் என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் அத்துமீறல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, உலகில் எந்த மூலையிலும் இதுபோன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. இந்த பிரச்னைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மத்திய அரசு மறுப்பு

தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட மத்திய அரசு தர மறுக்கிறது. முதல்வர் கடிதம் எழுதினார், எங்களைப் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு சுண்ணாம்பை மத்திய அரசு காட்டுகிறது. தமிழகம் சிறப்பாக செயல்படக்கூடிய மாநிலம். பல துறைகளில் முன்னிலை வகிக்கிறோம். வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பல வகைகளில் முன்னிலையில் இருந்து வருகிறோம். மாற்று கட்சி என்ற மனநிலையுடன் மத்திய அரசு பார்க்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு

பாஜக கவலைப்படவில்லை

கொல்கத்தா விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை காட்டுவதில் தவறில்லை. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் இது குறித்து அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும். அந்த வகையில் தான் பழனி முருகன் மாநாட்டை பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இவர்கள் வரலாம்,வரக்கூடாது என நினைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தமிழக அரசு தன் கடமையை சரியாக செய்கிறது. பல துறைகளின் குறியீடுகளில் முதலிடத்தில் இருந்து வருகிறோம். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவின் சராசரியை விட அதிக அளவில் உயரத்தில் இருக்கிறோம்.

தமிழக அரசுக்கு மத்திய அரசுடன் பிரச்னை இல்லை. கடமைகளை செய்ய உரிமைகளை எதிர்பார்க்கிறோம், போராடுகிறோம்.மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என திருச்சி சிவா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com