
சென்னை: நியாயவிலைக் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவா்கள், செப்.5 ஆம் தேதி வரை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆகஸ்ட் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் போன்ற சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களை முழுமையாக நகா்வு செய்ய முடியவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரா்களால் ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை முழுமையாகப் பெற இயலவில்லை.
எனவே, குடும்ப அட்டைதாரா்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதத்தில், துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரா்கள், அவற்றை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.