
ஃபென்ஜால் புயல் எதிரொளியாக இன்று(டிச. 1) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
அதன்படி, இன்று(டிச. 1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும்: முதல்வர் ஸ்டாலின்
வங்கக் கடலில் கடந்த நவ. 24-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவ.27-இல் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபென்ஜால் புயலாக வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது.
சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய பென்ஜால் புயல், புதுவை அருகே நள்ளிரவு கரையைக் கடந்ததாக கூறப்படுகிறது.
இப்புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து சில மணி நேரத்துக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):
மைலம் AWS (விழுப்புரம்) 510,
புதுச்சேரி AWS (புதுச்சேரி) 490. புதுச்சேரி (புதுச்சேரி) 480,
பத்துக்கண்ணு (புதுச்சேரி) 450, திருக்கண்ணூர் (புதுச்சேரி) 430, புதுச்சேரி டவுன் (புதுச்சேரி) 400,
திண்டிவனம் (விழுப்புரம்) 370,
RSCL-2 நேமூர் (விழுப்புரம்) 350,
பாகூர் (புதுச்சேரி), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 320,
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 310,
RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) தலா 280,
விழுப்புரம் (விழுப்புரம் 270,
செஞ்சி (விழுப்புரம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்) தலா 250,
RSCL-3 வளத்தி (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்) தலா 240.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.