போலீஸ் காவலில் இருந்த நபர் சித்திரவதை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு!

போலீஸ் காவலில் இருந்த நபர் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் விடுவிப்பு.
சஞ்சீவ் பட் (கோப்புப்படம்)
சஞ்சீவ் பட் (கோப்புப்படம்)படம்: PTI
Published on
Updated on
2 min read

போலீஸ் காவலில் இருந்தவரை துன்புறுத்திய வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை, குஜராத் போர்பந்தர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு கடுமையாக துன்புறுத்தியதாக, அப்போதைய போர்பந்தர் காவல்துறை கண்காணிப்பாளாராக இருந்த சஞ்சீவ் பட் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆதாரம் ஏதும் இல்லாததால் சஞ்சீவ் பட் குற்றமற்றவர் என தெரிவித்து கூடுதல் தலைமை நீதிபதி முகேஷ் பாண்டியா அவரை விடுவித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

 வழக்கின் பின்னணி

1994-ஆம் ஆண்டு சட்டத்துக்கு புறம்பாக பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்கும் விதமாக ஆயுதங்கள் இறக்குமதி செய்து பயன்படுத்திய வழக்கில் மொத்தம் 22 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நரன் ஜாதவை, கடந்த 1997-ஆம் ஆண்டு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பட் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணைக் கைதியின் அந்தரங்க உறுப்புகளில் மின் அதிர்வு பாய்ச்சி மிகக் கடுமையாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட ஜாதவ் கடந்த 1997-ஆம் ஆண்டு அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பட் மீது கடந்த1998-ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டதுடன் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பட் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய கூடுதல் தலைமை நீதிபதி முகேஷ் பாண்டியா அவரை விடுவித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

பட் மீதான பிற வழக்குகள்:

1990-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அத்வானி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீஸ் நிலையத்தில் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 1990-ம் ஆண்டில் போலீஸ் காவலில் ஒருவர் மரணமடைந்தது குறித்த வழக்கில், சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது, சஞ்சீவ் பட், ராஜ்கோட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூா் பகுதியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சோ்ந்த வழக்குரைஞா் சமா்சிங் ராஜ் புரோஹித் தங்கியிருந்தாா்.

அவா் தங்கியிருந்த அறையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அப்போது பனாஸ்கந்தா காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா்.

ராஜஸ்தானில் பிரச்னைக்குரிய ஒரு நிலத்தை சட்டவிரோதமாக மாற்றக் கோரிய விவகாரத்தில் வழக்குரைஞா் சமா்சிங் ராஜ் புரோஹித் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

பாலன்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், வழக்குரைஞா் மீது சஞ்சீவ் பட் பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானது. இவ்வழக்கில் சஞ்சய் பட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com