
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று(டிச. 10) அறிவித்தார்.
தமிழ்த் தாத்தா என்று அழைப்படும் உ.வே. சாமிநாதர் பிறந்த நாள் பிப். 19 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், அவரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று கூடிய நிலையில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
சட்டப் பேரவை இரண்டாம் நாளான இன்று (டிச.10) காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.
அதைத் தொடா்ந்து, கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி ஒதுக்க சட்ட மசோதாக்களும், ஏனைய பிற மசோதாக்களும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. அதன்பிறகு, தேதி குறிப்பிடாமல் சட்டப் பேரவை ஒத்திவைக்கப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.