எல்லா பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது: நடிகை ராஷ்மிகா

நடிகர் அல்லு அர்ஜுன் கைது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா....
நடிகை ராஷ்மிகா-அல்லு அர்ஜுன்
நடிகை ராஷ்மிகா-அல்லு அர்ஜுன் கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது என்று நடிகர் அல்லு அர்ஜுன் கைது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நான் இப்போது பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிஷ்டவசமான ஒன்று. வருத்தமானதும் கூட. ஆனாலும் எல்லா பழிகளையும் ஒருவரின் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது.

இந்த நிலை இரண்டுமே நம்பமுடியாதது மற்றும் இதயத்தை உடைக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், அல்லு அர்ஜுன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com