ஆப்கனில் 2 பேருந்து விபத்துகளில் 52 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் 2 பேருந்து விபத்துகளில் 52 பேர் பலியாகியதைப் பற்றி..
விபத்தில் சேதமடைந்து சிதறிக் கிடக்கும் பேருந்தின் பாகங்கள்.
விபத்தில் சேதமடைந்து சிதறிக் கிடக்கும் பேருந்தின் பாகங்கள்.
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு பேருந்து விபத்துகளில் மொத்தம் 52 பேர் பலியாகியாகியுள்ளனர்.

மத்திய ஆப்கானிஸ்தானின் கசினி மாகாணத்தில் தலைநகர் காபுலிலிருந்து கந்தார் நகரம் வரையில் செல்லும் நெடுஞ்சாலையின் வெவ்வேறு இடத்தில் நேற்று (டிச.18) ஒரே நாளில் இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

கசினி மாகாணத்திலுள்ள ஷாபாஸ் கிராமத்தின் அருகே அந்த நெடுஞ்சாலையில் நிலக்கரி ஏற்றி சென்ற லாரியின் மீது ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாவட்டமான அண்டாரில் ஓடும் அதே நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து லாரியில் மோதி இரண்டாவது விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த இரண்டு விபத்துகளிலும் மொத்தமாக 52 பேர் கொல்லப்பட்டதாக சொல்லபடுகிறது. இருப்பினும், ஒவ்வொரு விபத்திலும் எத்தனை பேர் பலியானார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இவ்விரு விபத்துகளில் 65 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மீட்புப்படையினர் விபத்து நடந்த இடங்களுக்கு வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தொடர் தாக்குதல்கள், உள்நாட்டுப் போர் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. மேலும், ஓட்டுநரின் அலட்சியப்போக்கினாலும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததினாலும் அந்நாட்டில் வாகான விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணத்தில் இதேபோல் பேருந்து ஒன்று எரிபொருள் ஏற்றி வந்த லாரியின் மீது மோதியதில் 20 பேர் பலியானதுடன் 38 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com