சதி செய்கிறார் அண்ணாமலை: திமுக மாணவரணி குற்றச்சாட்டு

கோவையின் அமைதியை சீர்குலைக்க சதி செய்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி
Published on
Updated on
1 min read

கோவையின் அமைதியை சீர்குலைக்க சதி செய்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கோவையில் எல்லா சமூக,மத மக்களும் நிம்மதியாக வாழ்ந்து,தொழில் செய்துவரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையும் அவரின் பாஜகவும் மத கலவரங்களை தூண்டி குளிர் காய நினைக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சியில் தென் இந்தியாவின் சிறந்த ஊர் கோவை கடந்த காலத்தில் தலைவர் கலைஞர் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து ஐடி நிறுவனங்களை கொண்டுவந்து கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

தற்போதைய முதல்வர் எங்கள் தலைவர் பல புதிய பன்னாட்டு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் புதிய பன்னாட்டு தொழில் வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளார்கள்.

புதிய தொழில்நுட்ப பூங்கா, நூலகம், நகை தொழில் மையங்கள், மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலங்கள் என அடிப்படை வசதிகளை கொண்டு கோவை நகரை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்க திராவிட மாடல் அரசு திட்டமிட்டு இயங்குகிறது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்து தொழில் வாய்ப்புகளை தடுக்கும் மோடி அரசு சமீப நாள்களாக அண்ணாமலையை வைத்து மத கலவரங்களை தூண்டி சமூக பதற்றத்தை ஏற்படுத்தி யாரையும் கோவையை நோக்கி தொழில் செய்ய வரவிடக்கூடாது என எண்ணுகிறது.

அண்ணாமலையின் சமீபகால நடவடிக்கை மற்றும் மத வெறுப்பு பிரசாரம் எல்லாவற்றையும் பார்க்கும் போது கோவையில் சமூக பதற்றம் நிழவுவது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த முயல்கிறார்.

நிம்மதியாக வாழும் கோவை மக்களிடம் விஷத்தை விதைக்கும் கலவர புத்தியை அண்ணாமலை கைவிட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் கொடூர முகத்தினை கோவை மக்கள் அம்பலப்படுத்தி தோற்கடித்தனர்.

தொடர்ந்து மத வெறுப்பு செய்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டுத்தொகை கூட வாங்க முடியாத நிலைக்கு கோவை மக்கள் உங்களை விரட்டி அடிப்பார்கள் கவனம்.

நல்லா இருக்கும் ஊருக்குள் உங்களின் கலவர புத்திகொண்டு மத விஷத்தை பரப்பாதீர்கள் என அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com