கோப்புப் படம்
கோப்புப் படம்

செல்போன் தகராறில் இளைஞர் கொலை! 4 பேர் கைது!

ஹரியானாவில் செல்போன் தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டதைப் பற்றி..
Published on

குருகிராம் மாவட்டத்தில் செல்போன் தகராறில் 19 வயது இளைஞரைக் கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருகிராம் மாவாட்டத்தின் பங்க்ரோலா கிராமத்தைச் சேர்ந்தவர் அஷிஷ் (வயது-19) ஆட்டோ ஒட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த டிச.22 அன்று இவரது உடல் ஹராசாரு கிரமத்தின் அருகிலுள்ள துவாரகா நெடுஞ்சாலையில் கிடப்பதாக குருகிராம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலில் இருந்த காயங்களை அடிப்படையாக கொண்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் அவர் இறந்து கிடந்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பின்னர், ஆஷிஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் கடந்த வியாழக்கிழமை (டிச.26) அன்று கண்கரோலா கிராமத்தில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றுபேரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை உள்பட 3 உறவினர்கள் கைது!

தொடர்ந்து அம்மாநில போலீஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் 4 பேரும் ஆட்டோ ஒட்டுநரான ஆஷிஷை தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஷிஷ் மூவரில் ஒருவரான பிர்ஜேஷ் என்பவரது செல்போனை பிடிங்கிக்கொண்டு தர மறுத்ததாகவும், இதனால் கோவமடைந்த அவர் தனது கூட்டாளிகளுடன் டிச.22 அதிகாலை பங்க்ரோலா கிராமத்திற்கு சென்று வாக்குவாத்தத்தில் ஈடுப்பட்டதில் அது கைக்கலப்பாக மாறியதாகவும்

அப்போது அவர்கள் அஷ்ஷின் தலையில் கல்லால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை நெடுஞ்சாலையில் வீசிவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com