
வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 'வள்ளுவ முனை நோக்கிப் புறப்படுகிறேன்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறும் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று தொடக்கிவைத்தார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், தற்போது கன்னியாகுமரி சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'வள்ளுவ முனை நோக்கிப் புறப்படுகிறேன்…
வள்ளுவம் போற்றுதும்!' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?
வள்ளுவர் சிலை வெள்ளி விழா
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு வெள்ளி விழா கொண்டாடவிருக்கிறது.
டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாள்கள் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கன்னியாகுமரியில் நடத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் - கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் - ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள், மாவட்ட நூலகங்கள், அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரியில் உள்ள வள்ளுவர் சிலையை 'பேரறிவுச் சிலை'யாகக் கொண்டாடுவோம் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையடுத்து வள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் குமரி சென்றுள்ளார்.
அங்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு வள்ளுவர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதல்வர் திறந்துவைக்கிறார். இரு நாள்கள் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.