மின் ஊழியா்கள் இன்று ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம்

மின்வாரிய ஊழியா்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மின்வாரிய ஊழியா்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மின்துறையைப் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மின்வாரிய ஊழியா்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், சண்டீகா், உத்தர பிரதேச மாநிலங்களிலுள்ள மின்வாரிய நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின்துறையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடும் வரை தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்த உள்ளதாகவும் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com