பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடங்கள் வரும் திங்கள்கிழமை (பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படும்.
பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் திங்கள்கிழமை(பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படவுள்ள நிலையில் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

இதில், கருணாநிதி, பேரறிஞர் அண்ணா நினைவிடம் திறப்பு விழா தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவிடம் வரும் திங்கள்கிழமை (பிப்.26) மாலை 7 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

பிப்.26 இல் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

அன்றைய நாளில் நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது; புதுப்பிக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் திறந்து வைக்கப்படவுள்ளன.

அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்கள் அச்சிடப்படவில்லை. அதனை சிறப்பு விழாவாக கொண்டாடப்படவில்லை எனக் கூறி அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி,கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com